சுடச்சுட

  

  பொதுப் பாதையைப் பயன்படுத்த தடுப்போர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதையைப் பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள்ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
   பாப்பிரெட்டிப்பட்டி அருகே குப்பனூர் காட்டுவளவு பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
   பில்பருத்தி அருகே குப்பனூர் பாரதிநகர் காட்டுவளவு பகுதியில் 100 - க்கும் மேற்பட்ட போயர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து
   வருகிறோம்.
   எங்களது குழந்தைகள் உள்பட பல்வேறு பணி நிமித்தமாக சென்றுவர, அப்பகுதியில் உள்ள பாதையைப் பயன்படுத்தி வந்தோம்.
   இந்த நிலையில், அந்தப் பாதையைப் பயன்படுத்தக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுவதோடு, அனுமதி மறுக்கின்றனர்.
   இதனால் நாங்கள் பொதுத் தேவைக்கு கூட வெளியே சென்றுவர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதையில் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai