சுடச்சுட

    

    பணியில் இருந்தபோது மது அருந்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஆட்டுக்காரம்பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
     தருமபுரி அருகே ஆட்டுக்காரம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. சுமார் 200 மாணவ, மாணவியர் பயிலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் பணிபுரிகிறார். இவர், செவ்வாய்க்கிழமை பள்ளியில் உள்ள அவரது அறையில் மது அருந்தியுள்ளார். இது குறித்து மாணவர்கள் அளித்த தகவலின் பேரில், பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் பள்ளியின் முன் திரண்டு பணியின்போது, மது அருந்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதுகுறித்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன், பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், விசாரணை அறிக்கை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
     இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பழனிச்சாமி உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai