சுடச்சுட

  

  தமிழ் படைப்பாற்றலை வளர்க்கும் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளிப்பு

  By தருமபுரி,  |   Published on : 04th November 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், தருமபுரி மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்கு மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வியாழக்கிழமை பரிசுகளை வழங்கினார்.
   தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வென்றோர் விவரம்: முதல் பரிசு (ரூ.10 ஆயிரம்): கவிதை-மாரண்டஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.கற்பகம், கட்டுரை-அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ர.வேதஸ்ரீ, பேச்சு-மாரண்டஅள்ளி அரசு மகளிர் பள்ளி மாணவி இர.ரஞ்சிதா.
   இரண்டாம் பரிசு
   (ரூ.7 ஆயிரம்): கவிதை-வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி த.பிரவீணா, கட்டுரை-அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ச.செüமியா, பேச்சு-அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கோ.நர்மதா.
   மூன்றாம் பரிசு (ரூ.5 ஆயிரம்): கவிதை-அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜ.ஜமுனா, கட்டுரை-வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இரா.கற்பகவல்லி, பேச்சு-வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இரா.நிஷா.
   முதல் பரிசு பெற்றவர்கள் சென்னையில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். பரிசளிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ரே.வெங்கடாசலம், மாவட்டக் கல்வி அலுவலர் சி.ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai