Enable Javscript for better performance
பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க 24 அதிவிரைவுப் படைகள்- Dinamani

சுடச்சுட

    

    பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க 24 அதிவிரைவுப் படைகள்

    By தருமபுரி,  |   Published on : 04th November 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க, கால்நடை பராமரிப்புத் துறையினரைக் கொண்ட 24 அதிவிரைவுப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
     தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் கூறியது: தில்லி மற்றும் கேரள மாநிலப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் இல்லை. என்றாலும், பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறையினரைக் கொண்ட 24 அதிவிரைவுப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
     கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் இப்படையில் இடம்பெற்றுள்ளனர். 24 மணி நேரமும் கோழிப் பண்ணைகள் கண்காணிக்கப்படுகின்றன.
     இக்குழுக்களின் நடவடிக்கையைக் கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு வாரத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும். கோழி மற்றும் கோழி இனப் பொருள்கள் போக்குவரத்தை அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.
     பறவைகள் சரணாலயம், நீர்நிலைகளில் பறவைகள் அசாதாரண இறப்பு காணப்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். கோழிப் பண்ணையாளர்கள் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
     மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் பயிற்சிகள், முகாம்களில் பறவைக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நச்சுக்கொல்லி, கிருமி நாசினி மருந்துகளை போதிய அளவு இருப்பில் வைத்துக்கொள்ள கால்நடை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     பொதுமக்கள் இதுதொடர்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
     கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் எம்.சீனிவாசன், உதவி இயக்குநர்கள் இளங்கோ, வில்வம், புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் எஸ்.பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai