சுடச்சுட

  

  பெண்கள், குழந்தைகள் 13 பேர் கடத்தப்பட்டதாக புகார்

  By தருமபுரி,  |   Published on : 04th November 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்கள் மற்றும் குழந்தைகள் என 13 பேர் பணம் கேட்டு கடத்தப்பட்டதாக அவர்களது உறவினர் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகார் அளித்தார்.
   வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே காக்கங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (27). சட்டக்கல்வி படித்து வரும் இவர், மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு: கிருஷ்ணகிரி அருகே தண்டேகுப்பத்தில் குடும்பத்துடன் தன்னுடைய இரண்டு சகோதரர்கள் வசித்து வருகின்றனர். அங்கு புதன்கிழமை வந்த மர்ம நபர்கள் சிலர், தங்களை போலீஸார் எனவும், விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி, அங்கு தங்கியிருந்த தனது உறவினர்கள்
   8 பெண்கள் மற்றும் 5 கைக்குழந்தைகள் அழைத்துச் சென்றனர். மேலும், அவர்கள் தருமபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வியாழக்கிழமை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பணம் கொடுத்தால், அவர்களை விட்டுவிடுவதாக என்னிடம் தொலைபேசியில் பேசினர். எனவே, அவர்களை மீட்டு, கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai