Enable Javscript for better performance
விவசாயி மீது தாக்குதல்: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 4 பேரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
     அரூர் வட்டம், கொங்கவேம்பு ஊராட்சி ச.பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் மகன் ராமு (65), அதே ஊரை சேர்ந்த செல்வம் ஆகியோரது குடிசை வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகைக்கு மர்ம நபர்கள் ஓரிரு தினங்களுக்கு முன் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, விவசாயிகள் ராமு மற்றும் செல்வம் ஆகியோரை அந்த மர்ம நபர்கள் தாக்கினராம். இதுகுறித்து ராமு, செல்வம் அளித்த புகாரின் பேரில், தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் க.பழனிகுமார் தலைமையிலான 4 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ச.பட்டியைச் சேர்ந்த தெய்வம் மகன்கள் பிரபாகரன் (20), வெள்ளையன் (24), கண்ணன் மகன் கமலநாதன் (26), தங்கவேல் மகன் தமிழமுதன் (19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai