சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் விஷப் பூச்சி கடித்ததில் சிறுவன் உயிரிழந்தார்.
     பென்னாகரம் போடூர் இருளர் காலனியைச் சேர்ந்தவர் மல்லன். இவரது மகன் சித்தேஷ் (3). கடந்த நவ.1-ஆம் தேதி போடூர் சின்னாற்றுப் பகுதியில் விறகுக்காக தனது பெற்றோருடன் சென்ற சிறுவன், அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தாராம்.
     அப்போது, சிறுவன் சித்தேஷை விஷப் பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதைக் கண்ட, அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai