சுடச்சுட

  

  ஏ.ரெட்டிஅள்ளி ரயில்பாதையில் கேட் அமைக்கப்படுமா?

  By தருமபுரி,  |   Published on : 05th November 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி அருகேயுள்ள ஏ.ரெட்டிஅள்ளி ரயில்பாதையில் கேட் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   தருமபுரி அருகே உள்ள ஏ.ரெட்டிஅள்ளியில் சேலம்-பெங்களூரு இருப்புப் பாதை உள்ளது. ஏ.ரெட்டிஅள்ளியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பல்வேறு பணி நிமித்தமாக பென்னாகரம் சாலை மற்றும் தருமபுரி நகருக்கு சென்றுவர இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல, சரக்கு வாகனம், மினி வேன் மட்டுமல்லாது கால்நடைகளும் இவ்வழியாகச் சென்று வருகின்றன.
   நாள்தோறும் பெங்களூரிலிருந்து மயிலாடுதுறை, திருச்சி, ஈரோடு, சேலம், நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலத்துக்கு ரயில்கள் சென்றுவரும் இந்த இருப்புப் பாதையில், ஏ.ரெட்டிஅள்ளியில் பல ஆண்டுகளாக ஆளில்லா லெவல் கிராஸிங் இருந்து வந்தது.
   இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு கருதி, அங்கு ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டார். மேலும், கேட் அமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. ஆனால், இதுவரை கேட் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ரயில்கள் வரும்போது, இரண்டு பக்கமும் கயிறு கட்டி, பின்னர் ரயில் கடந்த சென்றபின் அக் கயிறு அகற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
   நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வரும் இந்த இருப்புப் பாதையில், கேட் அமைக்க தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai