சுடச்சுட

  

  ஐ.டி.ஐ.யில் பயிற்றுநர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

  By தருமபுரி,  |   Published on : 05th November 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி அருகேயுள்ள கடகத்தூர் அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள கம்பியாள் தொழில்பிரிவில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
   இதுகுறித்து கடகத்தூர் அரசு தொழில்பயிற்சி நிலையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: கடகத்தூரில் உள்ள தொழில்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கம்பியாள் பயிற்றுநர் பணிக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஒப்பந்த பயிற்றுநர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (அருந்ததியர்) இன மகளிர் முன்னுரிமைப் பதிவர்/ஆதரவற்ற விதவை இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
   10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஈராண்டு கம்பியாள் தொழில்பிரிவில் தேசிய தொழில்சான்று மற்றும் தேசிய தொழில் பழகுநர் சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், மூன்றாண்டு முன் அனுபவம் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது 2016 ஜூலை 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
   தகுதியான நபர்கள் கல்வித்தகுதி, வயது, ஜாதி மற்றும் உரிய சான்று நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை, சுயமுகவரியிட்ட தபால்தலை ஒட்டப்பட்ட உறையுடன், வரும் நவ.11 அன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் அரசினர் தொழில்பயிற்சி நிலையம், கடகத்தூர், செல்லியம்பட்டி அஞ்சல், பாப்பாரப்பட்டி வழி, தருமபுரி-636809 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai