Enable Javscript for better performance
கால்வாய் சீரமைப்பு: கோட்டாட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரா.கவிதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் பகுதியில் விவசாயிகள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளால் மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அரூர் கோட்டாட்சியர் ரா.கவிதா பெரிய ஏரியின் கால்வாய் செல்லும் பகுதியில் ஆய்வு செய்தார். அரூர்-சேலம் பிரதான சாலையில் உள்ள சிறுபாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, அரூர் வட்டாட்சியர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் எஸ்.ரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai