Enable Javscript for better performance
டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     அரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கோட்டாட்சியர் ரா.கவிதா தொடக்கி வைத்தார்.
     அதிக காய்ச்சல், தலைவலி, கண்களில் வலி, மூட்டு மற்றும் தசைவலி, சளி மற்றும் வாந்தி எடுத்தல் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த நீர் தேங்கும் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். டப்பா, உரல், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவைகளில் நீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கீழ்பாட்சாபேட்டை, மஜீத்தெரு, கடைவீதி, பேருந்து நிலையம், வர்ணதீர்த்தம், கச்சேரிமேடு, திரு.வி.க. நகர் வழியாக பள்ளி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
     இதில், தருமபுரி மண்டலப் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தே.மரியஎல்சி, செயல் அலுவலர் (பொ) அ.அமானுல்லா, துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் இளவரசன், தலைமை எழுத்தர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai