சுடச்சுட

    

    நாளை 51 ஆயிரம் பேர் பங்கேற்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

    By தருமபுரி,  |   Published on : 05th November 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தொகுதி 4 பதவியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
     தருமபுரி மாவட்டத்தில் இந்தத் தேர்வில் 51,398 பேர் பங்கேற்கின்றனர். இதற்காக 131 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்லிடப்பேசி, கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது. தேர்வைக் கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர்கள் தலைமையில் 26 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அந்தந்த இடங்களில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பாப்பாத்தியம்மாள், அரசுப் பணியாளர் தேர்வாணைய சார்பு செயலர் சபிபேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai