சுடச்சுட

    

    மருத்துவ உதவியாளர் பணி: பதிவு சரிபார்க்க அழைப்பு

    By தருமபுரி,  |   Published on : 05th November 2016 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவ உதவியாளர் (தெரபியூட்டிக்) பணியிடத்துக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், தங்களது பதிவை சரிபார்க்குமாறு தருமபுரி மாவட்ட பதிவுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காலியாக உள்ள 103 தெரபியூட்டிக் உதவியாளர் பணியிடத்துக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
     மேல்நிலைக் கல்வித் தகுதியுடன், சென்னை இந்தியன் மெடிசின் மற்றும் ஓமியோபதி இயக்ககத்தால் வழங்கப்பட்ட இரண்டரை ஆண்டு டிப்ளமோ இன் நர்சிங் சான்று பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடத்துக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
     இதற்கான, உத்தேசப் பட்டியல் தயாரிக்கும் பணி வேலைவாய்ப்புத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இப்பணியிடத்துக்கான கல்வித் தகுதியுடைய, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள முன்னுரிமையுள்ள மற்றும் முன்னுரிமையற்ற பதிவுதாரர்கள் வரும் நவ. 7-ஆம் தேதிக்குள் தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai