சுடச்சுட

  

  மூத்த குடிமக்கள் ரூ.1 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம்: ஆட்சியர்

  By அரூர்,  |   Published on : 05th November 2016 03:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  மூத்த குடிமக்கள் ரூ.1 லட்சம் வரையிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.
   பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொட்டாவூரில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:
   தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், மூத்த குடிமக்கள் ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் மருத்துவ சிகிச்சை பெறலாம்.
   இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் உள்ளன. வேளாண் சேவை மையங்கள் தொடங்க படித்த இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் கடனுதவி அளிக்கப்படுகிறது. இதில் ரூ.10 லட்சம் அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த சேவை மையத்தில் விவசாயம் செய்வதற்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாம். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் தங்களது பொருளாதார வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.
   தொடர்ந்து, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை 47 பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.
   இதில், அரூர் கோட்டாட்சியர் ரா.கவிதா, ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் இலாஹிஜான், வட்டாட்சியர் கே.மணி, வட்டவழங்கல் அலுவலர் ஏ.பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai