சுடச்சுட

    

    மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த மூக்கனூரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (21). இவர் கடந்தாண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதான மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சத்தியமூர்த்தியைக் கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சத்தியமூர்த்திக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai