Enable Javscript for better performance
தருமபுரியில் சூரசம்ஹார விழா- Dinamani

சுடச்சுட

    

    கந்த சஷ்டியையொட்டி, தருமபுரியில் சனிக்கிழமை சூரசம்ஹார விழா நடைபெற்றது.
    தருமபுரி குமாரசாமிப்பேட்டையிலுள்ள அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த அக்.31-ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் சிறப்பு பூஜைகளுடன்
    லட்சார்ச்சனை நடைபெற்றது.
    விழாவின் 6-ஆம் நாளான நவ.5-ஆம் தேதி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வான வேடிக்கையுடன் தொடங்கியது. முன்னதாக, சிறப்பு அலங்காரத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பொம்மை குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில் அருள்மிகு சிவசுப்ரமணியர் அமர்ந்து, குமாரசுவாமிப்பேட்டை திருக்கோயிலிலிருந்து பென்னாகரம் சாலை, நான்குமுனைச் சாலை வழியாக தருமபுரி தலைமை அஞ்சல் நிலையம் அருகேயுள்ள திருக்கோயில் வாகன நிறுத்துமிடத்திற்கு ஊர்வலமாக
    அழைத்துவரப்பட்டார்.
    அங்கு இரவு 9.30 மணிக்குமேல் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில், அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.நித்யா, செயல் அலுவலர் மு.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்குந்த சிவநேய செல்வர்கள் மற்றும் விழாக் குழுவினரால் சுமார் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.6) காலை பூர்த்தி ஹோமமும், இரவு 9 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai