Enable Javscript for better performance
தேசிய திறனாய்வுத் தேர்வு: தருமபுரியில் 2,286 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய திறனாய்வுத் தேர்வு: தருமபுரியில் 2,286 பேர் எழுதினர்

    By DIN  |   Published on : 06th November 2016 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் 9 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வை 2286 மாணவ, மாணவிகள் எழுதினர்.
    தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்ட 2499 மாணவ, மாணவிகளில் 213 பேர் தேர்வெழுதவில்லை. தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
    தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் தேர்வு தற்போது நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக வருகிற மே மாதம் இந்தத் தேர்வு நடைபெறும். தேர்ச்சிப் பெறுவதற்கு தலித் மற்றும் பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 35 சதமும், இதர பிரிவைச் சேர்ந்தோர் 40 சதமும் மதிப்பெண்கள் பெற வேண்டும். தேர்ச்சி பெறுவோருக்கு பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி வரைஉதவித்தொகை வழங்கப்படும்.
    தருமபுரி மாவட்டத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களில் மீத்திறன் உள்ள 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக இந்த திறனாய்வுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
    பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களை உயர் கல்வி பயில ஊக்குவிப்பதற்காக இத்திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது என்றார்.
    இதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, பள்ளித் துணை ஆய்வாளர் வி.சீனிவாசன் ஆகியோர் தேர்வு மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai