சுடச்சுட

  

  பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநரின் உதவியாளர் காமராஜ் (32) வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
  அரூர் வட்டம், டி.ஆண்டியூரைச் சேர்ந்த கானப்பன் மகன் காமராஜ் (32). இவர், லாரி ஓட்டுநரின் உதவியாளராகப் பணிபுரிந்தார். அக்டோபர் 29-ம் தேதி, திருநெல்வேலியில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றி கொண்டு திருப்பதி செல்வதற்காக, சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் லாரி வந்தது. லாரியை ஓட்டுநர் சென்னப்பன் ஓட்டி வந்தார். இருளப்பட்டியில் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, லாரி மேல் ஏறி அதன் மீதிருந்த கயிறுகளை சரி செய்யும் போது அங்கிருந்த மின் கம்பி தாக்கியதில் மின்சாரம் பாய்ந்து காமராஜ் தூக்கி வீசப்பட்டார்.
  காயமடைந்த காமராஜ், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai