சுடச்சுட

    

    அரூரில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்

    By அரூர்,  |   Published on : 07th November 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் நகரில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணிகளை தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தே.மரியஎல்சி அண்மையில் தொடக்கிவைத்தார்.
     அரூர் பேரூராட்சிக்குள்ள்பட்ட அம்பேத்கர் நகரில் கழிவுநீர்க் கால்வாய் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரூர்-தீர்த்தமலை நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
     இந்த நிலையில், கடந்த மாதம் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். இதையடுத்து, அம்பேத்கர் நகரில் ரூ.18 லட்சம் மதிப்பில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தே.மரியஎல்சி தொடக்கிவைத்து பார்வையிட்டார்.
     அரூர் நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்கள், கொசு ஒழிப்புப் பணிகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள், பொது சுகாதார பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) அ.அமானுல்லா, துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார், தலைமை எழுத்தர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai