சுடச்சுட

    

    ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கிய தொழிலாளியைத் தேடும் பணி தீவிரம்

    By தருமபுரி,  |   Published on : 07th November 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கிய பெங்களூரைச் சேர்ந்த தொழிலாளியைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
     கர்நாடக மாநிலம், பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த ராஜா மகன் மணிகண்டன்(18). தொழிலாளியான இவர் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் 4 பேருடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். இந்த நிலையில், ஒகேனக்கல் அடுத்த அத்திமரத்துக் கடவு பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மணிகண்டன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் ஜானகிராமன் தலைமையிலான குழுவினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai