சுடச்சுட

  

  டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு: தருமபுரி: 42,415 பேர் தேர்வெழுதினர்

  By தருமபுரி,  |   Published on : 07th November 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 42,415 பேர் எழுதினர்.
   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-4-இல் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட முழுவதும் உள்ள 131 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது.
   மாவட்டத்தில் மொத்தம் 51,398 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 42,415 பேர் தேர்வெழுதினர். முன்னதாக, தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
   இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் ஆய்வு செய்தார். மேலும், துணை ஆட்சியர் தலைமையில் 26 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுவினர் தேர்வு மையங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு கண்காணித்தனர்.
   இதேபோல, முறைகேடுகளைத் தவிர்க்க கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றுவரும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவர்ததுக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் தேர்வுகள் அமைதியாக நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai