சுடச்சுட

  

  தருமபுரியில் மணக்கோலத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதிய தம்பதி

  By தருமபுரி,  |   Published on : 07th November 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியைச் சேர்ந்த மணமக்கள் மணிமாறன்- சித்ரா ஆகிய இருவரும் மணக்கோலத்தில் ஞாயிற்றுக்கிழமை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வெழுதினர்.
   இதுகுறித்து மணிமாறன் கூறியது: தருமபுரி மதிகோன்பாளையத்தைச் சேர்ந்த நான் பி.இ., படித்துள்ளேன். எனக்கும் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த எம்.எஸ்சி., பி.எட்., பட்டதாரியான சித்ராவுக்கும் ஞாயிற்றுக்கிழமை தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில் திருமணம் நடைபெற்றது.
   குரூப்-4 தேர்வுக்கு நாங்கள் இருவரும் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தோம். எங்கள் திருமண தேதியன்றே தேர்வுத் தேதியும் வெளியிடப்பட்டது. இதனால் தேர்வுக்குத் தயாரான நாங்கள் இருவரும், அதிகாலை 5 மணிக்கே எங்கள் திருமணத்தை முடித்து கொண்டு தேர்வு மையத்துக்கு வந்து தேர்வெழுதினோம் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai