சுடச்சுட

  

  திண்ணப்பட்டி பிரிவு சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

  By அரூர்,  |   Published on : 07th November 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரூர்-தருமபுரி சாலையில் உள்ள திண்ணப்பட்டி பிரிவு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
   தருமபுரி-அரூர் நெடுஞ்சாலை வழியாக சேலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், அரூர், திருவண்ணாமலை, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இதேபோல லாரி, கார், மினி சரக்கு வாகனங்கள் உள்பட அதிக வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலை தருமபுரி-அரூர் நெடுஞ்சாலையில் உள்ளது.
   இந்த சாலையில் உள்ள ஒடசல்பட்டி கூட்டுசாலை அருகே திண்ணப்பட்டி பிரிவு சாலை அமைந்துள்ளது. அதாவது மூக்கனூர் மலைத்தொடரில் இந்த திண்ணப்பட்டி பிரிவு சாலை அமைந்துள்ளது. இந்த பிரிவு சாலை வழியாக ஒட்டப்பட்டி, பட்டனூர், ஜக்குப்பட்டி, கம்பைநல்லூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட குக் கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.
   திண்ணப்பட்டி பிரிவு சாலையானது தருமபுரி-அரூர் நெடுஞ்சாலையில் சேரும் இடம் மரம், செடிகள் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த இடம் மிகவும் குறுகிய நிலையிலும் வளைவான பகுதியாகவும் உள்ளது. இந்த வளைவான தார்சாலையில் எதிர், எதிரே வரும் வாகனங்கள் ஓட்டுநர்களுக்கு தெரிவதில்லை. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
   எனவே, அரூர்-தருமபுரி நெடுஞ்சாலையில் திண்ணப்பட்டி பிரிவு சாலை சேரும் இடத்தில் சாலையை அகலப்படுத்தி, சாலையின் நடுவே தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும். சாலைகள் சேரும் இடத்தில் உயர்கோபுர மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.
   இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையின் தருமபுரி கோட்டப் பொறியாளர் ஆர்.சரவணன் கூறுகையில், தருமபுரி-அரூர் சாலையில் ஆபத்தான வகையில் உள்ள தார்சாலைகள் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் உள்ள திண்ணப்பட்டி பிரிவு சாலையில் சாலையை அகலப்படுத்தவும், சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர்கள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai