சுடச்சுட

    

    பயறு வகைகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

    By தருமபுரி,  |   Published on : 07th November 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குநர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குநர்கள் கா.கு.சேனாபதி, வெங்கடேசன் ஆகியோர் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.
     வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ச.சண்முகம், வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். உதவிப் பேராசியர் சங்கீதா, பயறு வகை பயிர்களில் நிலம் தயாரிப்பு, விதைத் தேர்வு, நீர் நிர்வாகம், உர மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் மற்றும் பயறு வகை பயிர்களில் மானாவரி சாகுபடி குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
     வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், சிவசங்கரி, இளவரசி, மகேஸ்வரி, உதவி மேலாளர்கள் கார்த்திகேயன், ரேணுகா, சேட்டு, பெரியசாமி மற்றும் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த 160 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai