சுடச்சுட

    

    மக்களவை உறுப்பினரிடம் மனு அளித்த மாற்றுத் திறனாளிகள்

    By தருமபுரி,  |   Published on : 07th November 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணியிடம், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை மனு அளித்தனர்.
     தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் வாங்கிட ஏதுவாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸிடம் மனு அளித்தனர். மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் பி.சரவணன், மாவட்டத் தலைவர் தி.தும்பாராவ், செயலர் கே.ஜி.கரூரான், பொருளாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai