சுடச்சுட

    

    அரூர் அருகே விவசாயியைத் தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
     அரூர் வட்டம், கொங்கவேம்பு ஊராட்சிக்குள்பட்ட எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் மகன் ராமு (65), அதே ஊரைச் சேர்ந்த செல்வம் ஆகியோரது குடிசை வீடுகள் மற்றும் மாட்டு கொட்டகைக்கு மர்ம நபர்கள் கடந்த வாரம் தீ வைத்தனராம். இதுகுறித்து 4 தனிப் படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், எஸ்.பட்டியைச் சேர்ந்த தெய்வம் மகன்கள் பிரபாகரன் (20), வெள்ளையன் (24), கண்ணன் மகன் கமலநாதன் (26), தங்கவேல் மகன் தமிழமுதன் (19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
     மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.பட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் தீர்த்திகிரியை திருப்பதியில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் வழியில் திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai