சுடச்சுட

  

  வேளாண் துறையில் உழுவை துடைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

  By தருமபுரி,  |   Published on : 07th November 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் காலியாக உள்ள உழுவைத் துடைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
   இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   வேளாண் பொறியியல் துறையில் காலியாக உள்ள உழுவைத் துடைப்பாளர் பணியிடத்திற்கு இன சுழற்சி முறையில் அருந்ததியர் ஒருவரை தாற்காலிக அடிப்படையில் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது.
   எனவே, தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வருகிற நவ.18-க்குள் சொந்தக் கையெழுத்தில் அலுவலக வேலை நாள்களில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
   தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட வாகன ஓட்டுநர் (இலகு ரக) உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
   அதிகபட்ச வயது 2016, ஜன.1 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, செயற் பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, ஆட்சியரக அலுவலக வளாகம் பின்புறம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகம்
   தருமபுரி-5 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai