சுடச்சுட

    

    ஆலங்குட்டை, எலுமல்மந்தையில் நீரின்றி அவதி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    By தருமபுரி,  |   Published on : 08th November 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஆலங்குட்டையில் நீரின்றி அவதிக்குள்ளாவதால், தண்ணீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
     பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி ஊராட்சிக்குள்பட்டது ஆலங்குடி. இந்த ஊராட்சியில் உள்ளது ஆலங்குட்டை, எலுமல்மந்தை மற்றும் இருளர் காலனி.
     இதில், ஆலங்குட்டை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு அதில், தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
     அதேபோல, எலுமல்மந்தைப் பகுதிக்கும் சிறுமின் விசைப்பம்புடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
     இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் விநியோகிக்கும் மோட்டார் கடந்த சில மாதங்களுக்கும் முன்பு, பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, எலுமல்மந்தையில் உள்ள சிறுமின் விசைப்பம்பு மின் மோட்டாரும் சில நாள்களுக்கு முன்பு பழுதடைந்ததாம்.
     இதனால், இந்த இரு மின் மோட்டார்களும் பழுது நீக்கம் செய்வதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
     அதேபோல, ஆலங்குட்டை பகுதிக்கு கடந்த சில நாள்களாக ஒகேனக்கல் குடிநீரும் விநியோகிக்கப்படவில்லையாம்.
     இதனால், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கும் நீரின்றி அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
     இதனால், இருளர் காலனி மக்கள் அருகே வனப்பகுதியில் உள்ள குடிநீóர்க் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஆலங்குட்டை பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று தண்ணீரைத் தலையில் சுமந்தபடி எடுத்து வருகின்றனர்.
     எனவே, பழுதடைந்துள்ள மின் மோட்டார்களை உடனடியாக சீர் செய்து, தங்களுக்கு சீரான தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai