Enable Javscript for better performance
ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞர் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
     கர்நாடக மாநிலம், பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த ராஜா மகன் மணிகண்டன் (18). கூலித் தொழிலாளியான இவர், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்கள் 4 பேருடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளார்.
     ஒகேனக்கல்லில் அத்திமரத்துக் கடவுப் பகுதியில் அன்றை தினம் மாலை மணிகண்டன் குளித்தபோது நீரில் மூழ்கினார்.
     இது தொடர்பாக, தகவல் அறிந்த, ஒகேனக்கல் தீயணைப்பு, மீட்புப் பணி நிலைய அலுவலர் ஜானகிராமன் தலைமையிலான குழுவினர், பரிசல் ஓட்டுநர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணி திங்கள்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, ஒகேனக்கல்லை அடுத்த மணல் திட்டு பகுதியில் மணிகண்டன் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சடலம் மீட்கப்பட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து, ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai