சுடச்சுட

    

    அரூர் அருகே மான் வேட்டையாடியதாக இளைஞரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     அரூர் வட்டம், தீர்த்தமலை வனச் சரகத்தில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து தீர்த்தமலை வனச் சரகர் குமரவேல் தலைமையிலான வனத் துறையினர் பூவம்பட்டி காப்புக்காட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
     அப்போது, வனப்பகுதியில் மான் வேட்டையாடி, அதன் இறைச்சியை எடுத்துச் சென்றதாக ஏழுமலையை வனத் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து மான் இறைச்சி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai