சுடச்சுட

  

  மிட்டாரெட்டி அள்ளி- பொம்மிடி இணைப்புச் சாலை கோரி உண்ணாவிரதம்

  By தருமபுரி,  |   Published on : 08th November 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மிட்டாரெட்டி அள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலையை விரைந்து அமைக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த வை.ரத்தினவேல் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.பி.புகழேந்தி, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் இரா.வள்ளுவர், திப்பிரெட்டி அள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் மணி உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
   இதில், 70 ஆண்டுகாலக் கனவுத் திட்டமான மிட்டாரெட்டி அள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலையை விரைந்து அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, உயர் மின் கோபுரங்களை அமைக்க போடப்பட்ட தாற்காலிக மண் சாலையைப் போக்குவரத்துக்கு பயன்படுத்திட அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பிரசாத், வழக்குரைஞர் எஸ்.அருணகிரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai