சுடச்சுட

    

    26 பேருக்கு ரூ.2 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

    By தருமபுரி,  |   Published on : 08th November 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் 26 பேருக்கு, ரூ.2 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     இக்கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 323 மனுக்கள் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் சார்பில் அளிக்கப்பட்டன.
     இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில், இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித் தொகை 9 பேருக்கும், கல்வி உதவித்தொகை 8 பேருக்கும், இருவருக்கு கண்ணாடியும், 6 பேருக்கு நவீன காதொலிக் கருவியும், சக்கர நாற்காலி ஒருவருக்கும் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 800 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பஷீர் அகமது, முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai