Enable Javscript for better performance
அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புகட்டமைப்புகளை பராமரிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 09th November 2016 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்து அரசு அலுவலகக் கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வலியுறுத்தினார்.
    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை புனரமைத்தல், பராமரித்தல் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு தற்போது, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுக் கட்டடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
    மேலும், அனைத்துத் துறை தலைமை அலுவலர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு செயல்பாடு குறித்து சான்றுகளை புகைப்படத்துடன்  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றார்.
    கூட்டத்தில், தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் வெ.ரகுபதி, உதவி நிர்வாகப் பொறியாளர்கள், நில நீர் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai