Enable Javscript for better performance
மாநில அறிவியல் கண்காட்சி:பள்ளி  மாணவிக்கு தங்கப் பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அறிவியல் கண்காட்சி: பள்ளி  மாணவிக்கு தங்கப் பதக்கம்

    By DIN  |   Published on : 09th November 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் தருமபுரி மாவட்டம், எட்டியாம்பட்டியைச் சேர்ந்த மாணவி தங்கம் பதக்கம் பெற்றார்.
    பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 5, 6-ஆம் தேதிகளில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
    கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 800 -க்கும் மேற்பட்டோர் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். இதில், பென்னாகரம் ஒன்றியம், எ.எட்டியாம்பட்டி நடுநிலைப் பள்ளியின்  7-ஆம் வகுப்பு மாணவி ஏ.சோனியா, பேரிடர் தற்காப்பு வீடு வடிவமைத்து அதனைக் கண்காட்சியில் வைத்திருந்தார்.
    இது மிகச்சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டு, மாணவி ஏ.சோனியாவுக்கு தங்கம் பதக்கத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மரியா ஆஷிம் பதக்கம், சான்றிதழை வழங்கினார் .
    மேலும், மாணவி விரைவில் தேசிய அளவில் புதுதில்லியில் நடைபெற உள்ள கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai