சுடச்சுட

  

  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில், தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தர்னா நடைபெற்றது.
  மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.துரைசாமி வரவேற்றார். மாவட்டச் செயலர் ஜி.பி.விஜயன், உதவிச் செயலர் பி.நெடுங்கிள்ளி, தமிழ்நாடு அரசு துறை ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் கே.செளந்திரம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
  இதில், தமிழக அரசு உத்தரவாதத்துடன் எரிசக்தி துறை மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்கு பின், மின்வாரியத்தில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், அவர்களுக்கு பணிக்கொடை, சேவை பணிக்கொடை வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, மின்வாரிய ஓய்வுபெற்றோருக்கும் திருத்தப்பட்ட மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  மின்வாரிய தணிக்கைப் பிரிவில் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்களை நியமித்திட வேண்டும்.
  தருமபுரி மின்பகிர்மான வட்டத்தில், ஓய்வூதியர்களின் குறைகளை தீர்ப்பதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.
  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
  கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் சார்பில் தர்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  அவதானப்பட்டி தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற தர்னா போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முனிரத்தினர், மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை உடனடியாக நடமுறைப்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai