சுடச்சுட

    

    அரூர் வர்ணதீர்த்தம் தெருவில் கிடந்த மண்ணுளி பாம்பை வனத்துறையினர் புதன்கிழமை மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.
     அரூர் வர்ண தீர்த்தம் தெருவில் மண்ணுளி பாம்பை கண்ட பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மொரப்பூர் வனசரகர் டி.கிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சென்று 3 அடி நீளம், 4 கிலோ எடையுள்ள மண்ணுளி பாம்பை மீட்டனர். பிறகு மீட்கப்பட்ட பாம்பை அரூர் காப்புக்காட்டில் விட்டனர்.
     மோட்டார் சைக்கிள் பறிமுதல்:
     மொரப்பூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட கீழ்மொரப்பூர் காப்புக்காட்டில் வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
     அப்போது, வனப்பகுதியில் சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்த ஒருவர் வனத்துறையினரைக் கண்டதும் தப்பி யோடினார். இதையடுத்து அவர் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மான் வேட்டையாட பயன்படுத்தக்கூடிய கம்பி வலைகள், மின்சாதனப் பொருள்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai