சுடச்சுட

  

  பாலக்கோட்டிலுள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 20 சதவீத போனஸ் கோரி அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   தொமுச செயலர் ஆர். மாதப்பன் தலைமை வகித்தார். தொமுச பேரவை மாநிலச் செயலர் சர்க்கரை என். போஸ், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி. ஆறுமுகம், பாட்டாளி சங்கச் செயலர் எம். பெருமாள், ஏஐடியுசி செயலர் என். கருணாகரன், அம்பேத்கர் சங்கச் செயலர் சி. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். 2007-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 8.33 சதவீத போனஸ் 1.67 சதவீத ஊக்கத்தொகை ஆகியவற்றுடன், சிறப்பு ஊக்கத் தொகையாக 10 சதவீத என மொத்தம் 20 சதவீத வழங்கப்பட்டு வந்தது. தற்போது 10 சதவிகிதம் குறைத்து போனஸ் வழங்கப்பட்டதைக் கண்டித்து இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், கரும்பு விவசாயிகளின் நலன் கருதி கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட இதர கோரிக்கைகளும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தொமுச தலைவர் என். வெங்கடேசன் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai