Enable Javscript for better performance
மாநில சைக்கிள் போட்டி: தருமபுரி அணி தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்பதற்கு தருமபுரி மாவட்ட அணி அண்மையில் தேர்வு செய்யப்பட்டது.
     தருமபுரி மாவட்ட சைக்கிள் போலோ கழகத்தின் சார்பில் மாநில அளவிலான இளையோர் பிரிவில் பங்கேற்க, தருமபுரி மாவட்ட அணி தேர்வு போட்டி எர்னஅள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
     இதில் 40 மாணவர், 30 மாணவியர் மாநிலப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அணி, விரைவில் கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநிலப் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளது.
     இந்தத் தேர்வுப் போட்டியில், மாவட்ட சைக்கிள் போலோ கழகத் தலைவர் ஜி.சங்கம், துணைத் தலைவர் பி.எம்,சண்முகம், துணைச் செயலர் பி.மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai