சுடச்சுட

  

  அரூர் பெரிய ஏரியை தூய்மை செய்ய பாஜக வலியுறுத்தல்

  By அரூர்  |   Published on : 11th November 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரூர் பெரிய ஏரியை தூய்மை செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
   அக் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நகரத் தலைவர் சி.தனசேகர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.அரூர் பெரிய ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.இந்த ஏரியில் தற்போது ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் உள்ளன.இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையுள்ளது.எனவே,அரூர் பெரிய ஏரியை தூய்மை செய்து,தண்ணீர் நிரப்பி படகு வசதி மற்றும் பூங்கா வசதி ஏற்படுத்த வேண்டும்.
   அரூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த,கச்சேரிமேடு முதல் நடசேன் பெட்ரோல் நிலையம் வரை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும்.வர்ணதீர்த்தம் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை வர்ணீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது.எனவே,இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.கச்சேரிமேடு பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
   இதில்,கட்சியின் மாவட்டத் தலைவர் வரதராஜன்,எஸ்.டி.அணி மாநில பொதுச்செயலர் ஜெயராமன்,மாவட்ட துணைத் தலைவர் கே.வெங்கடாசலம்,நகரச் செயலர் பாலாஜி,மாவட்ட நிர்வாகிகள் செந்தில்,திருப்பதி,கோபி,வேலவன்,பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai