சுடச்சுட

  

  பாலக்கோடு அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக,நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   பாலக்கோடு புதுôர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (30).தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்,கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்குச் சென்று வீடு திரும்பவில்லையாம்.இது தொடர்பாக,அவருடைய மனைவி கோமதி,கடந்த 5-ஆம் தேதி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
   இந்நிலையில்,பாலக்கோட்டில் உள்ள நாரயாணசாமி என்பவரின் விவசாயக் கிணற்றில் முருகனின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த முருகனின் உறவினர்கள்,அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும்,இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தருமபுரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
   தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர்,முருகனின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai