டி.ஆண்டியூரில் குடிநீர்த் தட்டுப்பாடு
By அரூர், | Published on : 11th November 2016 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
டி.ஆண்டியூரில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம்,வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உள்பட்டது டி.ஆண்டியூர் கிராமம்.இந்த ஊரில் 750-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள மக்களின் குடிநீர்த் தேவைக்காக டி.ஆண்டியூரில் 3 இடங்களில் 60 மற்றும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆனால்,குடிநீர்த் தொட்டிகளுக்கு முறையாக தண்ணீர் விடுவதில்லையாம்.இதனால்,இங்குள்ள மக்கள் நாள்தோறும் குடிநீர்த் தேவைக்காக பல்வேறு இன்னல்களை அடைகின்றனர்.
டி.ஆண்டியூர் இருளர் மற்றும் அருந்ததியர் குடியிருப்புகளில் தெருவிளக்குகள் பழுதாகியுள்ளன.அதேபோல்,கிராமத்தில் உள்ள சாலைகளின் ஓரத்தில் முள்புதர்கள் அடர்ந்து காணப்படுகின்றன.இதனால்,இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே,டி.ஆண்டியூர் கிராம மக்களின் குடிநீர் மற்றும் தெருவிளக்கு பிரச்னைகளைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.