சுடச்சுட

  

  நியாய விலைக்கடையில்பொருள்களை சீராக விநியோகிக்கக் கோரி நூதன போராட்டம்

  By தருமபுரி  |   Published on : 11th November 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியாய விலைக்கடையில் பொருள்களை சீராக விநியோகிக்கக் கோரி,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டி அருகே பிளப்பநாயக்கனஅள்ளி கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு,கிளை தலைவர் ராமு தலைமை வகித்தார்.மாவட்டச் செயலர் கிரைஸாமேரி,மாவட்ட துணைத் தலைவர் பூபதி,பொருளர் ராஜாமணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.இதில்,நியாய விலைக்கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக மாதந்தோறும் உளுத்தம் பருப்பு,துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்களை விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
   தகவல் அறிந்த,பென்னாகரம் வட்டாட்சியர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள்,மாதந்தோறும் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து,போராட்டம் கைவிடப்பட்டது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai