Enable Javscript for better performance
நீச்சல் போட்டி:செந்தில் பள்ளி மாணவருக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    நீச்சல் போட்டி:செந்தில் பள்ளி மாணவருக்கு தங்கம்

    By தருமபுரி  |   Published on : 11th November 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்டல அளவிலான நீச்சல் போட்டியில்,செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தங்கம் வென்றார்.
     சேலம் மண்டல அளவிலான நீச்சல் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம்,ஒசூரில் அண்மையில் நடைபெற்றது.இப்போட்டியில்,தருமபுரி,கிருஷ்ணகிரி,ஒசூர்,சேலம்,சங்ககிரி ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
     இதில்,தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் கோபிகிருஷ்ணன்,100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோக் பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
     மேலும்,அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் போட்டியில்,சேலம் மண்டலம் சார்பில் கலந்துகொள்ள தகுதி பெற்றார்.சாதனை புரிந்த மாணவரை,நிர்வாக அலுவலர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் (படம்).
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai