சுடச்சுட

    

    மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் "பள்ளிகளுக்கிடையே பகிர்ந்துணர்வு' என்ற திட்டத்தின்கீழ்,தருமபுரி அரசு அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்றுவரும் 20 மாணவியர்,பாலக்கோடு ஒன்றியம் நல்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பகிர்ந்துணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
     இதன் ஒரு பகுதியாக,மாரண்டள்ளி அருகே உள்ள தனியார் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழில்சாலையை மாணவியர் பார்வையிட்டனர்.இதில் அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் கே.சீனிவாசன்,புள்ளியியல் அலுவலர் சிவராமன்,தலைமையாசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 6 கிராமப்புற பள்ளிகள் மற்றும் 6 நகர்புற பள்ளிகளைச் சேர்ந்த 240 மாணவ,மாணவியர் பயன்பெறுவர் என முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai