சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
     அரூர்-சேலம் நெடுஞ்சாலையில், அ.புதுப்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த முதியவர் உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai