சுடச்சுட

  

  சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்

  By அரூர்,  |   Published on : 12th November 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரைவைப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
   பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், சர்க்கரை ஆலையின் தலைவர் வளர்மதி முருகேசன் தலைமை வகித்தார். 2016-17-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணிகளை சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் ச.கவிதா தொடக்கி வைத்தார்.
   நிகழாண்டின் கரும்பு அரைவைப் பருவத்தில், 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கரும்புகள் அனைத்தும் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, 4.50 லட்சம் டன் கரும்புகள் அரைவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
   இந்த பருவத்தில் கரும்பு அரைவை செய்யும் பணிகள் வரும் 2017 மே மாதம் இறுதிவரை நடைபெறும். சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை எடுத்து வருவதற்காக லாரி, டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் உள்பட 200 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
   இந்த விழாவில், கரும்பு பெருக்கு அலுவலர் இ.குணசேகரன், தலைமை பொறியாளர் எம்.குணசேகரன், அலுவலக மேலாளர் டி.சிவா, தலைமை ரசாயனர் (பொ) ரவிச்சந்திரன், கணக்கு அலுவலர் சி.சண்முகம், நிர்வாகக் குழு இயக்குநர்கள் எம்.லோகநாதன், ஜி.மணிமேகலன், மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai