சுடச்சுட

  

  2-ஆவது நாளாக வங்கிகளில் மக்கள் கூட்டம்

  By தருமபுரி/கிருஷ்ணகிரி,  |   Published on : 12th November 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
   மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை வங்கிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். இக் கூட்டம், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.
   மேலும், இரண்டு நாள் கழித்து ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காலை முதலே ஏ.டி.எம். மையம் முன் மக்கள் பெருமளவு திரண்டனர். ஆனால், குறித்து நேரத்தில் திறக்காமல் காலதாமதாக ஒரு சில இடங்களில் மட்டும் ஏ.டி.எம்.கள் திறக்கப்பட்டன. இந்த மையங்களில் ரூ.100, ரூ.50 நோட்டுகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. அவையும் சில மணி நேரங்களில் தீர்ந்ததால், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
   கிருஷ்ணகிரியில்...
   கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாததால், வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் குவிந்தனர். சில ஏ.டி.எம். மையங்கள் மதியத்துக்கு பிறகு செயல்பட்டன. வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.2 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகள் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். ரூ.2,000 நோட்டுக்கான சில்லரை மாற்ற பெரும் சிரமத்துக்குள்ளாயினர். மேலும், வங்கிகளில் புதிய ரூ.500 நோட்டு வழங்கப்படாத நிலையில், சில்லரையாக ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால், செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற பொதுமக்கள் இரண்டாவது நாளாக பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai