சுடச்சுட

  

  சாரணர் இயக்கம் உதவும் மனப்பான்மையை வளர்க்கிறது: முதன்மைக் கல்வி அலுவலர்

  By DIN  |   Published on : 13th November 2016 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாரணர் இயக்கம் மாணவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கிறது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி கூறினார்.
  தருமபுரி மாவட்ட சாரணர் சங்கம் சார்பில், சாரணர் ஆசிரியர்களுக்கான கூட்டம் அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், சாரணர் சங்க மாவட்டச் செயலர் பா.வெங்கடேசேன் அறிக்கை வாசித்தார்.
  பொருளாளர் நாகராஜ் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் சி.ராஜசேகரன் வாழ்த்திப் பேசினர். கடந்த 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆகிய கல்வியாண்டுகளுக்கான மாநில ஆளுநர் விருதுக்கு ஆண்டுக்கு 200 பேர் என மொத்தம் 600 சாரண, சாரணியர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றனர்.
  இவர்களுக்கு அவ்விருதுக்கான சான்றிதழ்கள் மற்றும் உலக சாரணர் சங்கம் சார்பில் சர்வதேச சாரணர் சான்றிதழ்கள் 202 பேருக்கு கூட்டத்தில் வழங்கப்பட்டன.
  இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பேசியது:
  சாரணர் பயிற்சியானது உதவி மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கிறது. மேலும், இப்பயிற்சியால் மாணவர்கள் மிகச் சிறந்த பக்குவம் அடைகின்றனர். பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனையும் சாரணர் பயிற்சி வழங்குகிறது. பேரிடர் காலங்களில் சாரணர், செஞ்சிலுவை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகிய மாணவர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றனர்.
  ஆசிரியர்கள் தங்களுடைய பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து, அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் கல்வியோடு சாரணர் இயக்கம் போன்ற இணைச் செயல்களில் முழுமையாக மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார்.
  கூட்டத்தில், அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் முனுசாமி, சாரணர் பயிற்சி ஆணையர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai