சுடச்சுட

    

    தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 13th November 2016 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியை வறட்சிப் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
    கட்சியின் ஒன்றிய செயலர் சோலை மா.ராமச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. நிகழாண்டியில் வடகிழக்குப் பருவமழை பொய்த்து போனதால் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு தீவனம், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
    புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் மற்றும் கூடுதல் சேவை மையங்கள் தொடங்க வேண்டும். புதிதாக அச்சடிக்கப்படும் ஆயிரம் ரூபாய் நோட்டில் அம்பேத்கர் உருவத்தை பதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலர் கி.ஜானகிராமன், மாவட்ட பொருளர் லட்சுமணன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் செ.பாரதிராசா, மாநில துணைச் செயலர்கள் கி.அதியமான், தலித் இளமாறன், மாவட்ட துணைச் செயலர்கள் செல்லை சக்தி, ஆதித்தமிழன், மாவட்ட துணை அமைப்பாளர் பெ.கேசவன், ஒன்றிய துணைச் செயலர் ரா.சபரீஸ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai