சுடச்சுட

  

  தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 45,034 வழக்குகளுக்குத் தீர்வு

  By DIN  |   Published on : 13th November 2016 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 45,034 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
  44,694 குற்றவியல் வழக்குகள், 4071 வங்கி வராக் கடன் வழக்குகள், 827 விபத்து வழக்குகள், 260 உரிமையியல் மற்றும் இதர வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
  அவற்றில், 127 விபத்து வழக்குகளும், 44,589 குற்றவியல் வழக்குகளும், 49 உரிமையியல் வழக்குகளும், 269 வராக்கடன் வழக்குகளும் முடிக்கப்பட்டன. இதன்மூலம் ரூ. 7.21 லட்சம் மதிப்பிலான இழப்பீடு, அபராதம் பெறப்பட்டது.
  மக்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். சுபாதேவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் பங்கேற்றனர்.
  சார்பு நீதிபதி சையத் பர்க்கதுல்லா, உரிமையியல் நீதிபதி செகணாஸ் பானு, குற்றவியல் நடுவர்கள் எஸ். ஜீவா பாண்டியன், பி. அல்லி ஆகியோர் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று வழக்குகளை முடித்தனர்.
  கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். குணசேகர், மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தின் சிறப்பு மாவட்ட நீதிபதி கே. சீதாராமன், தலைமைக் குற்றவியல் நடுவர் கே. மணி, மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் கே. அப்புனுகவுண்டர், செயலர் எஸ். சிவக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் எஸ். சண்முகவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்க கோரிக்கை
  தருமபுரியில் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஒன்றியப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  சத்துணவு ஊழியர்களுக்கு குடும்பப் பாதுகாப்புடன் கூடிய, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 3500 ஓய்வூதியம் வழங்க வேண்டும். உதவியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் சமையலராக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
  தருமபுரியில் மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாமவர்களுக்கு தனியாக பேருந்து வசதி செய்துத் தர வேண்டும். பணிக்குச் செல்லும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகளிர் விடுதிகளை அரசே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ஏ. பெருமாள் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ. சேகர், சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் கே. அண்ணாதுரை, மாவட்டத் தலைவர் கே. துரை, செயலர் சி.எம். நெடுஞ்செழியன், ஒன்றியச் செயலர் ஆர். காந்தன், பொருளாளர் வி. ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பேசினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai